Breaking News

பொய்யான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பவேண்டாம்: மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:*
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஏதேனும் வேலைவாய்ப்பு இருப்பின் அதற்கான முன் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் www.chennaimetrorail.org தெரிந்து கொள்ளலாம். 

மேலும் தினசரி தமிழ் நாளிதழ், ஆங்கில நாளிதழ்மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புதாள்களிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. 

இதைத் தவிர வேறு எந்தவொரு இணையதளத்திலும் வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். 

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யாக இணையத்தளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

பொய்யான இணையத்தளத்தில் வெளியாகும் செய்திகள், விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாந்தால் இதற்கு எந்த விதத்திலும் இந்நிறுவனம் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Give Us Your Feedback