Breaking News

மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் கைது

அட்மின் மீடியா
0
மாணவி தற்கொலை - பள்ளி முதல்வர் மீரா கைது



கோவையில் +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்

கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்தார் இந்த வழக்கில் பாலியல் துன்புறுத்தல் செய்த இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டார்

இந்நிலையில் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் கொடுத்த பாலியல் தொந்தரவால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் புகார் கொடுத்தும்,  நடவடிக்கை எடுக்காத கோவை தனியார் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags: தமிழக செய்திகள்

Share this