டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சி இ ஓவாக இந்தியர் நியமனம்
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலகியதை அடுத்து இந்தியரான பராக் அக்ரவால் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டரில் விளம்பரப் பொறியாளராகச் சேர்ந்தார்.
ட்விட்டர் 2018இல் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பராக் அகர்வாலை நியமித்தது.
தன்மேல் நம்பிக்கை வைத்து ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நிறுவனத்தை மென்மேலும் உயர்த்த பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்
