உங்கள் ஐபோனை நீங்களே சரிசெய்யலாம் - ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு
ஆப்பிள் முதன்முறையாக செல்ஃப் ரிபயர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களை நீங்களே சரிசெய்யலாம்
சர்வீஸ் செண்டர்களுக்கு போகவேண்டாம்
ஆப்பிள் முதன்முறையாக செல்ப் ரிப்பேர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சுய பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ், நீங்கள் இப்போது ஆப்பிள் உதிரி பாகங்களை வாங்கலாம் மற்றும் உங்கள் ஐபோன்ஐ நீங்களே சரிசெய்யலாம்.
முதற்கட்டமாக இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது.மேலும் முதலில் பயனர்களுக்கு ரிப்பேர் மேனுவல் வழங்கப்படும். இதனை வாசித்து சாதனத்தை சரி செய்யும் நம்பிக்கை பயனருக்கு ஏற்படும் பட்சத்தில், அவர்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்களை வாங்க முன்பதிவு செய்யலாம்.
https://www.apple.com/in/newsroom/2021/11/apple-announces-self-service-repair/
Tags: தொழில்நுட்பம்