Breaking News

கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரியும் சில பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராடி வரும் நிலையில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 



இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்  என்றும், தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. 

பொறியியல்,கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Share this