பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை: கல்வித்துறை அமைச்சர்
அட்மின் மீடியா
0
சென்னையில் புதிய ஆன்லைன் நூலகத்தை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது
பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டை போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எனவும் பொதுதேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. எனவும் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5.80 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்றார்.
மேலும், மாணவர்களின் பாதுகாப்புக்காக 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என்று தெரிவித்தார்
Tags: தமிழக செய்திகள்