Breaking News

மழைகாலம் முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அட்மின் மீடியா
0
.மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னையில் இன்று 3வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 




ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்

அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவினை வழங்க வருவாய்த்துறை சார்பில் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback