நாளையும், நாளை மறுநாளும் ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வுமையம்
தமிழகத்திற்கு நாளையும், நாளை மறுநாளும் ரெட் அலர்ட் எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு காரணமாக அதி கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்க கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை 10-ந் தேதி மற்றும் நாளை மறுதினம் 11-ந் தேதியில் சில இடங்களில் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது
அதன்படி, 10 ம் தேதி கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் 11 ம் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்'டும்,
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்'டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
https://mausam.imd.gov.in/imd_latest/contents/districtwise-warning.php?day=Day_3
Tags: தமிழக செய்திகள்
