Breaking News

சிலிண்டர் மானியம் இன்னும் கிடைக்கவில்லையா? – உடனே இதை செய்யுங்க!!

அட்மின் மீடியா
0

சிலிண்டர் மானியம் வந்ததா இல்லையா என்று தெரிந்துகொள்வதற்கு ஆன்லைன் மூலமாகவே நீங்கள் பார்க்கலாம்

அதற்க்கு முதலில் நீங்கள்  http://mylpg.in/index.aspx என்ற வெப்சைட்டில் சென்று 


பாரத் கேஸ் ,ஹிந்துஸ்தான் கேஸ் அல்லது இண்டேன் கேஸ் என்று உள்ள படத்தில் உங்களுடைய கம்பெனியை கிளிக் செய்யுங்கள்


அடுத்து அதில் மேலே உள்ள new user என்பதை கிளிக் செய்து அதில் உள்ள து LPG ஐடியைப் பதிவிட்டு, நீங்கள் சிலிண்டர் வாங்கும் கம்பெனி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.சிலிண்டருக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரையும் கொடுக்க வேண்டும். மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணைப் பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு 'proceed' கொடுக்க வேண்டும்.

அடுத்து அதில் உங்களது ஈமெயில் ஐடி கொடுத்து பாஸ்வர்டு உருவாக்க வேண்டும். பின்னர் உங்களது ஈமெயில் ஐடிக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும். அதை கிளின் செய்தால் உங்களது கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும்.

மீண்டும் அந்த வெப்சைட்டில் லாகின் செய்து View Cylinder Booking History/subsidy transferred’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மானியம் தொடர்பான விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு சிலிண்டர் மானியம் வராமல் இருந்தாலோ வேறு ஏதேனும் புகார்கள் இருந்தாலோ 18002333555 என்ற டோல் பிரீ நம்பரை அழைத்து புகார் கொடுக்கலாம். சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜென்சிக்கு நேரில் சென்றும் நீங்கள் இதுகுறித்து விசாரிக்கலாம்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback