Breaking News

அடுத்த 4 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை வானிலை ஆய்வு மையம் அறிக்கை

அட்மின் மீடியா
0

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக் கூடும்.இதன் காரணமாக,



இன்று

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், 

அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.

திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை,குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, 19.11.2021 

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 260 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், நாளை காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

20.ம் தேதி

கிருஷ்ணகிரி, தருமபுரி ,திருப்பத்தூர் ,ஈரோடு ,கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் ,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

21ம் தேதி 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22 ம் தேதி

வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

வானிலை ஆய்வு மைய அறிக்கை படிக்க:-

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback