இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை
தெற்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர கனமழை பெய்யும்
தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுநாளும் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்து வருகிறது. அதோடு வங்கக்கடலில் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தீவிர மழை பெய்து வந்தது. இந்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்தது. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலிமை அடைந்து வருகிறது. இதனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உறுதியாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது தமிழ்நாடு நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளன.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான 24 மணி நேரத்தில் அது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும். என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
