Breaking News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் மற்றும் 2000 பணம் வழங்க ஆந்திர முதல்வர்ஜெகன் மோகன் உத்தரவு

அட்மின் மீடியா
0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் மற்றும் 2000 பணம் வழங்க ஆந்திர முதல்வர்ஜெகன் மோகன் உத்தரவு. மேலும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவிப்பு



கடந்த வாரம் அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கோரத் தாண்டவமாடியது. இதன் தாக்கம் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் காணப்பட்டது. ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கின. கார்கள், டூவீலர்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அரசு ஊழியர்கள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.

வீடு முற்றிலும் சேதம் அடைந்திருந்தால் ரூ. 95 ஆயிரமும், லேசான சேதம் ஏற்பட்டிருந்தால் ரூ.5,200-ம் வழங்கப்படும். 

வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டிருந்தால் புதிய வீடு கட்டி தரப்படும். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பசுக்களுக்காக ரூ. 30 ஆயிரமும் ஆடுகளுக்காக தலா ரூ.3 ஆயிரமும் அளிக்கப்படும்.

அதேபோல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபுர் ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி, 25 கிலோ இலவச அரிசி, பருப்பு 1 கிலோ, எண்ணெய் 1 கிலோ, வெங்காயம் 1 கிலோ, உருளைக் கிழங்கு 1 கிலோ ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் மேற்கண்ட மாவட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback