18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்... அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அவரது வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
பஞ்சாப்பில் ஜனவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாபில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், 18 வயதுக்கு மேற்பட்ட பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 அவரது வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். ஒரு குடும்பத்தில் 3 பெண் உறுப்பினர்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும். இது உலகின் மிகப்பெரிய பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
Tags: இந்திய செய்திகள்
