ரூ1 கோடி மதிப்பு சொத்தை ரிக்ஷா தொழிலாளிக்கு எழுதி வைத்த வயதான பெண்மணி
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்த மினாதி பட்நாயக் (63) என்ற மூதாட்டி தனது ரூ. 1 கோடி மதிப்புள்ள மூன்று மாடி கட்டிடம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூபாய் ஆகியவற்றை ரிக்ஷா தொழிலாளி புதா சமலி என்பவருக்கு கொடுத்தார்.
ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரை சேர்ந்த மினாட்டி, கட்டாக் நகரத்தில் உள்ள கிருஷ்ண குமார் பட்நாயக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது கணவர், மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.. ஆனால் கடந்த ஆண்டு மினாட்டியின் கணவர் உயிரிழந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு அவரது மகளும் இறந்துவிட்டார்..
இதுகுறித்து மினாட்டி அவர்கள் கூறுகையில்....
‘நான் துக்கத்தில் வாழ்ந்தபோது, என் உறவினர்கள் யாரும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை.. நான் தனியாக இருந்தேன். ஆனால், இந்த ரிக்ஷா காரரும் அவரது குடும்பத்தினரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் உடல்நிலையை கவனித்துக்கொண்டனர்..அந்த ரிக்ஷாகாரரின் அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றை பார்த்து, இந்த முடிவை எடுத்தேன்.. என கூறுகின்றார்
Tags: இந்திய செய்திகள்