தடை செய்யபட்ட பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை தமிழக அரசு எச்சரிக்கை
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது உத்தரவை மீறி தடை செய்யபட்ட சரவெடி பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட சரவெடிகளை உற்பத்தி செய்யவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பேரியம் கலந்த பட்டாசுகளை ஓரிடத்தில் சேமிக்கவோ, வேறு இடத்திற்கு கொண்டு செல்லவோ கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
தமிழக அரசின் அறிக்கை:-
Tags: தமிழக செய்திகள்
