தொலைந்த சொத்து பத்திரத்தை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?
தொலைந்த சொத்து பத்திரத்தை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?
ஆன்லைனில் சொத்து நகல் பத்திரம் பெறுவது எப்படி?
முதலில் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள். அதில் உங்களுக்கு லாகின் செய்து கொள்ளுங்கள் லாகின் இல்லை என்றால் பயனர் பதிவு என்பதை கிளிக் செய்து உங்களுக்கு என ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.
அடுத்து அதில் மின்னணு சேவை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், அதில் சான்றளிக்கப்பட்ட நகல் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்தாக உங்கள் ஆவணங்களின் விவரங்களை சரியாக பதிவு செய்யுங்கள்
அடுத்து சார்பதிவாளர் அலுவலகம் என்ற இடத்தில், தாங்கள் எந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்திர்களோ அந்த அலுவலகத்தினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகு ஆண்டு என்ற இடத்தில் தாங்கள் எந்த ஆண்டு பத்திரம் பதிவு செய்திர்களோ அந்த ஆண்டினை தேர்வு செய்து தேடுக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு வரும் இணையபக்கத்தில் உங்கள் ஆவணங்களின் விவரங்கள் காண்பிக்கப்படும் அடுத்து நகல் விண்ணப்பிக்க என்ற ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.
அதில் உங்கள் விவரங்களை உள்ளிட்ட வேண்டும்.அதாவது பத்திரம் யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களுடைய பெயர் மற்றும் அவருடைய தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து என்டர் கொடுக்கவும்
அடுத்து வரும் பக்கத்தில் கட்டணம் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றில் தாங்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய கட்டணத்தை செலுத்திவிடுங்கள்
அடுத்து உங்களுக்கு Acknowledge Receipt கிடைக்கும் அதில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அதன் பிறகு 1 இரண்டு நாளில் லாகின் செய்து பாருங்கள் டவுன்லோட் ஆப்சன் தோன்றும் அதில் உங்கள் சொத்து பத்திரம் இருக்கும் அதனை பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்
Tags: முக்கிய செய்தி
