புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – இனி ரேசன்கார்டு விண்ணப்பம் ரத்து ஆகாது புதிய வசதி அறிமுகம்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அமலில் உள்ளது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமான ஒன்றாகும். போதிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதன்பின்பு மீண்டும் புதியதாக விண்ணப்பிக்கவேண்டும்
இந்நிலையில் விண்ணப்பம் ரத்தாவதை தடுத்து மீண்டும் பதிவேற்றம் செய்ய புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.அதன்படி விண்ணப்பம் ரத்து செய்யப்பட்ட இணையதளத்தில் ‘மறுபரிசீலனை விண்ணப்பம்’ என்ற புதிய பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றி திருத்தங்களை செய்து சமர்ப்பிக்க வேண்டும் இந்த புதிய வசதி மூலம் இனி ரேசன் கார்டு விண்ணப்பம் ரத்து என்ற பேச்சுக்கு இடமில்லை
Tags: தமிழக செய்திகள்