Breaking News

பெயரை மாற்றியது பேஸ்புக் புதுபெயர் என்னவென்று தெரியுமா

அட்மின் மீடியா
0

பேஸ்புக்'கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.



பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை 'மெட்டா' என மாற்றி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். அதே சமயம் பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே 'மெட்டா' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆப்களின் பெயரில் எந்த மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கள் 'ஆப்'களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.

மேலும் புதிய பயணமாக மெட்டாவெர்ஸ் என்கிற வெர்ச்சுவல் உலகத்தை உருவாக்க ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிடபட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளார்


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback