இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை முழு விவரம்!
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது
வானிலை ஆய்வுமையம்
Tags: தமிழக செய்திகள்