Breaking News

2022 ம் ஆண்டு ஹஜ் யாத்திரை அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்

அட்மின் மீடியா
0

2022ம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என, மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்


ஹஜ் யாத்திரை ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி தலைமை தாங்கினார்.அதன் பின்பு செய்தியாளர்களிடம்

ஹஜ் யாத்திரைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையும் தொடங்கப்படும்.

இந்திய மற்றும் சவுதி அரேபிய அரசுகளின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைப்படி ஹஜ் பயணியர் தேர்வு செய்யப்படுவர். 

ஹஜ் யாத்ரீகர்களுக்கு டிஜிட்டல் சுகாதார அட்டை, மெக்கா, மதீனாவில் தங்குமிடம், போக்குவரத்து தொடர்பான அனைத்துத் தகவல்களும் வழங்கப்படும். 

விண்ணப்பதாரர்கள் இரண்டு தடுப்பூசிகள் கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback