Breaking News

மாதம் 1250 ஸ்காலர்ஷிப் கல்லூரிபடிப்பு வரை பெறலாம் 10 ம் வகுப்பு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

2021- 22-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


அறிவிப்பு:-

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில்,2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 23.01.2023 அன்று  நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

உதவி தொகை எவ்வளவு:-


இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்களது முதுகலை படிப்பு வரை அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் போது மாதந்தோறும் ரூ.1250 வீதம் அந்த மாணவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

பின்னர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கு மாதம் ரூ.2000 வீதம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

முனைவர் படிப்பிற்கு பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும். 


விண்ணப்பிக்க:

https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1635578003.pdf


விண்ணப்பம் டவுன்லோடு செய்து சரியாக பூர்த்தி செய்து  விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து உங்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்


விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 

20.11 .2021


மேலும் விவரங்களூக்கு:

https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1635578244.pdf

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback