Breaking News

BREAKING ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணமடைந்தார்

அட்மின் மீடியா
0
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி (வயது 63) அவர்கள் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback