Breaking News

போனில் யார் கேட்டாலும் உங்கள் வங்கி விவரங்களை சொல்லாதீர்கள்: ரிசர்வ் வங்கி

அட்மின் மீடியா
0

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கேஒய்சி பூர்த்திசெய்ய வேண்டும். 

 


வங்கி மோசடிகளில் ஈடுபடுவோர் வாடிக்கையாளர் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி வாடிக்கையாளரை ஏமாற்றி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர்.

தற்போது இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வந்துள்ளன. இது குறித்து எச்சரிக்கும் விதமாக  ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் போனில் உங்கள் தகவல்களை தர வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. 

மேலும் அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து வரும் போனில் வங்கிக் கணக்கு தொடர்பான எந்த விவரத்தையும் அளிக்க வேண்டாம். 

அதேபோல இணையதளம் மூலம் வரும் மின்னஞ்சலுக்கும் பதில் தரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஸ்வேர்டு, ஏடிஎம் பின். ஆதார் எண், ஓடிபி போன்ற விவரங்களைத்  யாருக்கும் தர வேண்டாம் எந்த வங்கியும் போன் செய்து உங்கள் ஏடிஎம்மில் உள்ள எண்களை கேட்காது. அதேபோல் எந்த வங்கியும் ஓடிபியும் கேட்காது. அதனால் மக்கள் மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback