ஆந்திரா - ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது குலாப் புயல்
அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இருக்கிறது. அந்த குலாப் புயல், இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்