Breaking News

டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசு புதிய விதிக்கு இடைக்கால தடை உயர் நீதிமன்றம்

அட்மின் மீடியா
0
டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 



கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்தது. அதில் சமூக ஊடகங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிராக இருக்கும் தகவல்களை தடுப்பற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

இந்த விதிமுறை படைப்பாளிகளின் மற்றும் எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது என கர்நாடக இசை கலைஞர் டிஎம் கிருஷ்ணா, மற்றும் டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.  இன்று வழக்கு விசாரணை வந்தபோது, 

டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதி ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் ஊடகங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக இருந்தால் ஜனநாயகத்தின் 4வது தூண் இல்லாமல் போய்விடும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

மேலும் டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய விதிக்கு தடை விதித்து உத்தவிட்டது  சென்னை உயர்நீதிமன்றம்!


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback