9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் ..!
அட்மின் மீடியா
0
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி
காஞ்சிபுரம் - அமுதவல்லி,
செங்கல்பட்டு - சம்பத்,
விழுப்புரம் - பழனிசாமி,
கள்ளக்குறிச்சி-விவேகானந்தன்,
வேலூர்-விஜயராஜ் குமார்,
ராணிப்பேட்டை - மதுமதி,
திருப்பத்தூர் - காமராஜ்
நெல்லை - ஜெயகாந்தன்,
தென்காசி - பொ.சங்கர்,
Tags: தமிழக செய்திகள்


