பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு
அட்மின் மீடியா
0
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில் இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தற்போது யாரும் எதிர்பாராத நிலையில் மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமரிந்தர் சிங்கின் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் சரண்ஜித் சிங் சன்னி.
Tags: இந்திய செய்திகள்