முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
அட்மின் மீடியா
0
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவருக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்
