நடந்தது என்ன? பீகாரில் சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி பணம்.. முழு விவரம்...
நடந்தது என்ன? பீகாரில் சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி பணம்.. முழு விவரம்...
பீகாரில் வங்கி தவறுதலாக டெபாசிட் செய்த ரூ.5 லட்சம் பணத்தை திருப்பி வழங்க கிராமவாசி மறுப்பு தெரிவித்து அந்தப் பணம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சத்தின் முதல் தவணை என நினைத்து செலவழித்துவிட்டதாக கூறியதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் .பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் பஸ்தியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார். இருவரும் தங்கள் பள்ளியில் அரசு சீருடைவாங்க அனுப்பிய பணத்தைச் சரிபார்க்க அருகில் இருந்த வங்கிக்குச் சென்றுள்ளனர்.அப்போது அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்து வங்கி ஊழியர் அதிர்ச்சி அடைத்துள்ளார்.
அதற்குக் காரணம், அந்த மாணவர்களின் வங்கி கணக்கில் சுமார் 960 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. அதில் விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் 60 கோடியும், அஷிஷ்ட் குமார் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாயும் இருந்துள்ளது.
இது குறித்து வங்கி மேலாளர் கூறுகையில், வங்கி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறுவர்களின் கணக்கில் இவ்வளவு கோடி இருப்பதாக கணக்கு காட்டுகிறதே தவிர உண்மையில், அவ்வளவு தொகை அதில் இல்லை என்றார்.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்