Breaking News

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்




இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் 

தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளது. 

மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback