இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு
கடந்த ஆட்சியில் தமிழகத்தில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன வார்டு வரையறை முழுமை பெறாததால் நீதிமன்ற உத்தரவு படி இந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைப்பட்டுள்ளது. என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
அதன்படி காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
![]() |
Tags: தமிழக செய்திகள்