வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் 5 ஆண்டு இன்சூரன்ஸ் கட்டாயம் – உத்தரவை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு நிறுத்திவைப்பு
விபத்து வழக்கு ஒன்றில் கடந்த 26.08.2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது
இந்நிலையில் பொது காப்பீட்டு கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் வாகனங்களுக்கு 5 ஆண்டுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீட்டை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி மனுதாக்கல் செய்தது
அந்த கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை தற்காலிமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தார் மேலும் வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்