TrueCallerக்கு போட்டியாக வந்துவிட்டது இந்தியாவின் BharatCaller சிறப்பம்சம் முழுவிவரம்....
ட்ரூகாலருக்கு இணையான பாரத் காலர் என்ற செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் காலர் 100% மேட் இன் இந்தியாஆப் ஆகும் , பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் மாணவர் பிரஜ்வால் சின்ஹா மற்றும் குணால் பஸ்ரிச்சா இருவரும் சேர்ந்து இந்த ஆப்பை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த செயலி, இந்தியர்களின் தனி நபர் தகவல் பாதுகாப்பு உத்திரவாதமானது என கூறப்படுகிறது. மேலும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த TrueCaller ஆப்பிற்க்கு நிச்சயம் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது
மேலும் இந்தியாவை மையமாகக் கொண்டு முற்றிலும் பாதுகாப்பு அம்சம் நிறைந்த இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:-
உங்களுக்கு தெரியாத அழைப்புகள் வரும்போது பாரத் காலர் யார் அழைக்கிறார்கள் என பெயரைக் காட்டும்.
பாரத்காலர் பயனர்களின் தொடர்புகள் மற்றும் அழைப்பு பதிவுகளைச் சேமிக்காது.
அவர்களின் தனியுரிமை பாதிக்கப்படாது.
பாரத்காலரின் எல்லா தரவும் என்கிரிப்டேட் பார்மேட்டில் சேமிக்கப்படுகிறது. இதனால் இதியாவிற்கு வெளியே இருப்பவர்கள், பாரத் காலரில் இருக்கும் தகவல்களை பெற முடியாது.
தற்போது ஆங்கிலம் தவிர, இந்தி, மராத்தி, தமிழ், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரத் காலர் ஆப் டவுன்லோடு செய்ய:-
https://play.google.com/store/apps/details?id=com.bharatcallerapp.callerid&hl=en_US&gl=US
Tags: தொழில்நுட்பம்