Breaking News

FACT CHECK: முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் என ஷேர் செய்யப்படும் புகைப்படங்கள் உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  நம்ம வேலுமணி வீட்டில் கைபற்றிய சில்லறை காசுகள் என்று  சில  புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

ேற்று 10.08.2021 தமிழக அரசின் முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகியுமான வேலுமணி வீடு உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகை என்று  ஒரு படத்தை சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் கடந்த 11.12.2016 அன்று கர்நாடக மாநிலத்தில் ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது சிக்கிய 5.7 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் 32 கிலோ நகைகள், 90 லட்ச ரூபாய் பழைய நோட்டுகள் ஆகும்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 
அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback