Breaking:வேளாண் சட்டத்திற்க்கு எதிராக போராடியவர்கள் மீது போடபட்ட வழக்குகள் வாபஸ் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் முன்மொழிந்துள்ளார்.
இதனையடுத்து,பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்ற்கடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்