Breaking News

BREAKING : ஆகஸ்டு 5 முதல் இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல அனுமதி

அட்மின் மீடியா
0

இந்தியா பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்குகிறது. தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது

 


கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 முதல் இந்தியா பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்குவதாக அறிவித்துள்ளது .

அதன்படி, மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்சி விசா  வைத்திருப்பவர்கள் அனைவரும் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் வர ICA விடம் விண்ணப்பிக்கலாம். 

விதிமுறைகள்:-

Validity Work Permit உள்ள நபராக இருக்க வேண்டும்.

அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர், அதவாது இரண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்கள் கடந்தவராக இருக்க வேண்டும். 

இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் QR-CODE உடன், உங்கள் பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். 

அமீரகம் வரும்போது பயணிகள் தங்களின் தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனைக்கான கொரானா நெகட்டிவ் முடிவை வைத்திருக்க வேண்டும் மற்றும் அதற்கான சான்றிதழில் QR குறியீடு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கும்போது ஒரு PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

அமீரக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியல்:-

பைசர் 

சினோபார்ம் 

ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனக்கா அல்லது கோவிஷீல்டு 

மாடர்னா 

ஸ்புட்னிக் வி 

தடுப்பூசி போட்டவர்கள் அமீரகம் வரலாம்  


https://twitter.com/NCEMAUAE/status/1422497554986569732


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback