இனி கவலை இல்லை ஆந்திரா, கர்நாடகாவுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கம்!
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் இன்றுமுதல் அமலுக்கு வந்த நிலையில், ஓசூரில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு நள்ளிரவு முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
கரோனா காரணமாக நீண்ட நாட்களாக அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்து போக்குவரத்துக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது இந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முன்தினம், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. அதே போல் கர்நாடகத்தில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகின்றன.
Tags: தமிழக செய்திகள்