Breaking News

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

அட்மின் மீடியா
0
டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீ தூரம் வீசி தங்கம் பதக்கம் பெற்றார்.

இதில், முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரத்துக்கும், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியை பாயவிட்டார். நான்காவது முயற்சி தோல்வியில் முடிந்தாலும் கூட அவர் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.
 
121 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்தார்.  இந்தியாவை உலக அரங்கில் உயர்த்திய வீரருக்கு பாராட்டு குவிகிறது.




டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் இந்தியா வாங்கிய பதக்கங்கள் :

பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்

இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்

குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்கு லவ்லீனா வெண்கல பதக்கத்தை வென்றார்

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி  அணி வெண்கலப் பதக்கம் வென்றது

மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார்  இந்தியாவின்  நீரஜ் சோப்ரா 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback