Breaking News

ஒலிம்பிக்ஸில் தங்கத்தைப் பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்! சுவாரஸ்யமான செய்தி

அட்மின் மீடியா
0

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதல் போட்டியில்  இரு போட்டியாளர்களும் தங்கத்தைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது

 



கத்தாரைச் சேர்ந்த பார்ஷிம் Mutaz Essa Barshim  என்பவரும் இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரியும் Gianmarco Tamberi என்பவரும் 1 ம் தேதி நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இருவரும் ஒரே புள்ளியை பெற்றார்கள்

அடுத்ததாக நடுவர்கள் 2.39 மீ. உயரத்தை யார் தாண்டுகிறார்களோ அவர்களுக்குத் தங்கபதக்கம் என கூறியதை அடுத்து இருவரும் 3 முறை முயற்ச்சித்தார்கள் ஆனால் முடியவில்லை 

அடுத்து ஜம்ப் ஆஃப் என்கிற முறையை நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதில் அதிக உயரம் தாண்டும் வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று  ஒரே ஒரு சான்ஸ் மட்டுமே கொடுக்கப்படுமென தெரிவித்தார்கள்  இத்தாலி வீரர் டம்பேரி கால் வலி காரணமாக பின் வாங்குவதாக அறிவித்தார்.  


எதிர் போட்டியாளர் பின்வாங்கியதை அடுத்து கத்தார் வீரருக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் நடுவர்களிடம் நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்? என்று கேட்க தங்கபதக்கத்தை  இருவருக்கும் பகிந்தளிப்போம் " என்று கூற உடனே அவரும் பின் வாங்குவதாக அறிவித்தார். எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று இப்படி செய்து  தன் Sportsmanship யை நிருபித்தார் கத்தார் வீரர் பாஷிம் இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது.  ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான தருணங்களில் ஒன்று.
 

 வீடியோ பார்க்க:-

 https://twitter.com/TheAthletic/status/1421874509079011335

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback