Breaking News

இனி வாகனங்களுக்கு புதிய பதிவு எண்; மத்திய அரசு அறிமுகம்..!

அட்மின் மீடியா
0

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இனிமேல் புதிதாக வாங்கும் வாகனங்களுடன் மாநிலம் விட்டு மாநிலம் இடம் மாறினாலும், வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக, ‘பாரத் சீரிஸ்’ எனும் புதிய பதிவு நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 

பொதுவாக நாம் புதிதாக ஒரு வாகனம் வாங்கும்போது அந்த மாநிலத்துக்கான வாகன பதிவு செய்யப்படும். 


 

மேலும் நாம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வாகனங்கள் எடுத்துச் செல்லும்போது, அந்த மாநிலங்களில் வாகனங்களை ஓட்டிச் செல்ல வாகன பதிவை மாற்ற வேண்டும்.

இப்படி மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் அனைத்திற்கும் புதிய பதிவு எண்ணை மாற்ற வேண்டும் என்பதால், அதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க புதிய வாகன பதிவில் BH என தொடங்கும் Bharat series பதிவு எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில்,  மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ பாதுகாப்பு அமைப்புகள் போன்றவைகளின் அலுவலகங்கள் நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட மாநிலங்களிலோ, யூனியன் பிரதேசங்களிலோ அமையப்பெற்றிருந்தால், அதில் பணிசெய்வோர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும் போது BH பதிவு அடையாளத்தைக் கொண்ட ஒரு வாகனத்திற்கு, புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது அறிவித்துள்ள அறிவிப்பின்படி, இந்த வாகன பதிவு வசதி, 

தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், 

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், 

மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் 

மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும் சாதாரண மக்களுக்கு பொருந்தாது. என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பதிவு நடைமுறை செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

 example: BH 01 IN 1947



Tags: தமிழக செய்திகள்

Share this