Breaking News

வருமான வரி புகார்,குறைகளை தீர்க்க இனி நேரில் செல்லவேண்டாம் இமெயில் செய்தால் போதும்

அட்மின் மீடியா
0

வருமான வரி செலுத்துபவர்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தீர்ப்பதற்காக வருமான வரித் துறை 3 மின்னஞ்சல் முகவரிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.



வரி செலுத்துபவர்கள் வருமான வரி அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே, ஆன்லைன் மூலமாக வரிகளை மதிப்பீடு செய்யவும், வருமான வரி தொடர்பான நோட்டீஸ்களுக்கு விளக்கம் தரவும்  வரி செலுத்துபவர்கள் தங்கள் குறைகளை ஆன்லைனில் தெரிவிக்க, நிவாரணம் பெற 3 இமெயில் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  


வரி மதிப்பீடு புகாருக்கு samadhan.faceless.assessment@incometax.gov.in

வரி அபராதம் புகாருக்கு samadhan.faceless.penalty@incometax.gov.in

வரி மதிப்பீடு மேல்முறையீடுக்கு samadhan.faceless.appeal @incometax.gov.in 

ஆகிய இமெயில்கள் மூலம் நிலுவையில் உள்ள தங்கள் வரி விவகாரங்கள் குறித்த குறைகளை தெரிவித்து விளக்கம் பெறலாம் என வருமான வரித்துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this