ஆன்லைன் ரம்மியை தடைசெய்யும் புதிய சட்டம் விரைவில்.... அமைச்சர் ரகுபதி
அட்மின் மீடியா
0
ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கமுடியாது எனவும், புதிய சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தற்போது தெரிவித்திருக்கிறார். அவசர கதியில் அதிமுக அரசு சட்டம் கொண்டுவந்த காரணத்தினாலேயே சென்னை உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்துள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.
Tags: தமிழக செய்திகள்
