ஹோண்டா நிறுவனம் வெளியிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! முழு விவரம்...
Honda U-BE எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா யு-பீ (U-BE) எனும் பெயரில் இந்த புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:-
இந்த U-BE எலக்ட்ரிக் ஸ்கூட்டரரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.
முழுக்க முழுக்க நகர்ப்புற வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது
முன் பகுதியில் கால் வைக்கும் இடத்தில் பெரிய இட வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் லக்கேஜ்களை வைத்துக் கொள்ள முடியும்.
வெள்ளை, சிவப்பு, நீலம் மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களில் கிடைக்கும்
இதில் 3 விதமான பேட்டரி பேக்குகள் கிடைக்கின்றன. இதைப் பொறுத்து இந்த பைக்கினுடைய செல்லும் தூரமானது 50கிமீ, 70 கிமீ மற்றும் 85 கிமீ ஆக உள்ளது.
இந்த பைக்கின் மொத்த எடையே 54 கிலோ தான்,
இந்தியாவில் இந்த பைக் வாங்கமுடியுமா:-
U-BE மாடலை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது தெளிவாக கூறப்படவில்லை.
ஆனால் ஹோண்டா நிறுவனம் தனது எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags: தொழில்நுட்பம்