மாடு, குதிரை,நாய் வளர்த்தால் இனிமேல் 10 ரூபாய் வரி!! மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு ரூ.10 வரி வசூலிக்கப்படும். என்று மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சியின் வதை கூடங்களில் மட்டுமே இனி இறைச்சிகளை வதை செய்ய வேண்டும்.அனுமதிக்கப்படாதஇடங்களில் ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை வதம் செய்து விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
மாடு, நாய், குதிரை போன்ற விலங்குகளை கண்டுகொள்ளாமல் விடும் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம்
தெருவில் வீட்டு நாய் மற்றவர்களை அச்சுறுத்தினால் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்
சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் திடக் கழிவுகளை பொதுவிடங்களில் போட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூ. 2,000 அபராதம்
இறைச்சி கடை, பிராணி விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுரடிக்கு ரூ.10 வழங்க வேண்டும்
இந்த புதிய நடைமுறைகள் தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதும் ஆட்சேபனைகள் இருந்தால் 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்