உபியில் ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி இஸ்லாமியர் மீது கொடூர தாக்குதல்!!
அட்மின் மீடியா
0
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கும்பல் ஒன்று அவரது மகள் எதிரே கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கான்பூரை சேர்ந்த அப்சார் அஹமது என்ற அந்த நபர் ரிக்ஷா ஓட்டி வருகிறார். நேற்று சேர்ந்த கும்பல் ஒன்று அப்சாரை மோசமாக தாக்கி உள்ளனர். பெரிய கும்பல் ஒன்று
அவரை சுற்றி நின்றி கன்னத்தில் அறைந்து, குச்சிகள் மூலம் தாக்கி கொடுமை
படுத்தி உள்ளனர். அதிலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்சாருடன்
அப்போது அவரின் குழந்தையும் இருந்துள்ளார்.
சிறுமி அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டு.. அவரை விடுங்கள்.. அடிக்காதீர்கள் என்று தொடர்ந்து கெஞ்சி இருக்கிறார் ஆனாலும் அந்த கும்பல் அப்சாரை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி மோசமாக தாக்கியது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரை காப்பாற்றி அழைத்துச் சென்றனர். 10 பேர் இந்த குழு வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோவை பார்க்க:
https://twitter.com/MuslimMirror/status/1425820520012865539
Tags: இந்திய செய்திகள்