Breaking News

முதல்வராக ஸ்டாலின் முதல் பட்ஜெட் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் மக்கள்

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, பிப்., 23ல், அப்போதைய துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்தார்.அதன்பின் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, 2021 - 2022ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை, இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  நிதி அமைச்சர் தியாகராஜன், முதன் முதலாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 



முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் இன்று திமுக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டசபையில் முதன் முறையாக, இன்று காகிதமில்லா இ - பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. 

தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதை நிறைவேற்றும் வகையில், புதிய அறிவிப்புகள்பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறு, குறு தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்தும், மானிய விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். 

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் உதவித் தொகை ஆயிரம் ரூபாயை, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப்போல ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படுமா 

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 நிதியுதவி, நகைக் கடன், கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இன்றைய தமிழக பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் நாளை முதன் முறையாக, 2021 - 22ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Share this