உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 31-ம் தேதி வெளியிடப்படும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரசு உள்ளாட்சி சாதாரணத் தேர்தல், 2021-க்கான பாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ள செய்தியில்
புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி மாவட்டங்கள் ஊரசு உள்ளாட்சி தேர்தல்கருக்காக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரிவான வாக்காளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
மேற்படி மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, எந்த ஒரு வாக்காளரின் பெயரும் ஊரசு உள்ளாட்சி அமைப்புகருக்கான வாக்காளர் பட்டியலின் விடுபடாமல் சேர்க்கப்பட்டு, அவர்களை தொடர்புடைய உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வைத்து ஜனநாயகக் கடமை ஆற்ற வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது
மேற்படி 9 மாவட்டங்களில் உள்ள உன்னாட்சி அமைப்பிற்காசு தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் தனியாக தயாரிக்கப்படுவது அல்ல. இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து 19.3.2021 அன்று வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகருக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கிராம ஊராட்சி வார்டு சுபாரியான உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றது.
மேற்படி ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல், 24921, தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகருக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களாக் கொண்டு கிராம ஊராட்சி வார்டு வாரியாக தயாரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலரால் 31.08.2021 அன்று வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் எனில், முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான மாக்காளர் பதியு அலுவலரிடம் சென்று அவர்களது பெயர்களை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
இவ்வாறு புதிதாகச் சேர்க்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே அவரது பெயர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய ஊரக உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் உரியவாறு லாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால், தொடர்புடைய சட்டமன்ற வாக்காளர் பதிவு அதுவலரை தொடர்பு கொண்டு பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் போன்ற தேவையான திருத்தங்களை செய்து கொள்குமாறு வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...
Tags: தமிழக செய்திகள்