பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் இன்று முதல் 8 ம்தேதி வரை திறக்க அனுமதி இல்லை
அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் திருவிழாவுக்கு பக்தர்கள் நேரில் வர அனுமதியில்லை: பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட செப்.28 முதல் நவ.8 வரை அனுமதி இல்லை காவல் ஆணையர் அறிவிப்பு
காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்
பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 49-வது வருடாந்திர திருவிழா, இன்று (29-ம் தேதி) தொடங்கஉள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழாவில் நேரில் பங்கேற்க இந்த ஆண்டுபொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை.
எனவே பொதுமக்களும், பக்தர்களும், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு கொடியேற்ற தினமான இன்றும், அடுத்தமாதம் 7-ம் தேதி நடைபெறும் தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் வருவதை தவிர்க்க வேண்டும்.
பக்தர்கள் இந்நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடியாக காணலாம்.
பொதுமக்கள் இன்று மற்றும் அடுத்த மாதம் 7-ம் தேதி ஆகிய இரு தினங்களிலும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்தில் வர வேண்டாம்.
அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட இன்றுமுதல் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது.
திருவிழா நாட்களில் பொதுமக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதிமறுக்கப்படுகிறது.
பொதுமக்களும், பக்தர்களும் கரோனா தொற்றிலிருந்து விடுபட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்