Breaking News

85% கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

அட்மின் மீடியா
0

தனியார் பள்ளிகளின் கட்டண வசூல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வருமானம் பாதிக்காத பெற்றோர்களிடம் இருந்து 85 சதவீத கட்டணத்தையும், வேலைவாய்ப்பை இழந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 75 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம் என்று ஏற்கனவே உத்தரவிட்டது. 



நடப்பு கல்வி ஆண்டு 85 % பள்ளி கட்டணத்தை தனியார் பள்ளிகள் 6 தவணைகளாக 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் வசூலிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

பொருளாதார இழப்பை சந்தித்த பெற்றோர் பள்ளிகளிடம் அனுமதி கேட்டு கல்வி கட்டணத்தை 75% அளவு செலுத்தலாம் என்றும் அவ்வாறு அனுமதி கேட்பவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி அளித்து ஆறு தவணைகளில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கூறியுள்ளார் . 

கட்டணம் உள்ளிட்ட எவ்வித காரணங்களையும் கூறி மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற கூடாது என்றும் ஆன்லைன் வழிக்கல்வி வகுப்பிலிருந்து புறக்கணிக்க கூடாது என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார் . 

Tags: தமிழக செய்திகள்

Share this