Breaking News

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் விவரங்கள் சேகரிப்பு

அட்மின் மீடியா
0

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.


 

திமுக தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. 

தற்போது திமுக அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆன நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ள பயனாளிகளின் விவரங்களை பெறுவதற்கான சுற்றறிக்கை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

கூட்டுறவு வங்கிகள் வருகிற 16 ஆம் தேதிக்குள் இதுகுறித்த விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Share this